5 செப்டம்பர்க்கான தினசரி வேத தியானம்
நேச வைராக்கியம் பாதாளத்தைப் போல் கொடியதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித் தழலும், அதின் ஜøவாலை கடும் ஜøவாலையுமாயிருக்கிறது. இனிமைமிகு பாடல் 8:6
நேச வைராக்கியம் அல்லது பொறாமை, கிறிஸ்தவ ஜீவியத்திற்கு ஒரு பெரும் எதிராளி. இது முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும். ஏனென்றால் இது மனிதனுக்கும், தேவனுக்கும் எதிராளியாக இருந்து பகைமையை உருவாக்கும். நம் இருதயங்களையும், சிந்தனைகளையும் ஓர் அக்கினித் தழல் போல் எரித்து விடும். இதன் கொடூர விஷம், இதனைக் கொண்டுள்ளவர்களை மட்டுமல்ல, பிறரையும் பாதிக்கக்கூடியது. இது பாவ சிந்தனையை உண்டாக்கி கெட்ட காரியங்களை நடப்பிக்கவும் செய்யும். ஒருவருடைய சிந்தனை இந்த விஷயத்தினால் ஒரு முறை பீடிக்கப்பட்டு விட்டால், இதினின்று விடுதலை அடைவது மிகக் கடினமானது. ஆகவே, இந்த பொறாமை நம்மிடம் இருந்து உடனடியாக அகற்றப்பட வேண்டும். அறிவுக்கேற்ற வைராக்கியம் நம்மில் காணப்பட வேண்டும். (2 கொரி. 11:1-2) Reprints Reference 3231:5 R3231

