13 செப்டம்பர்க்கான தினசரி வேத தியானம்
இதோ, சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுகிறது, எத்தனை நன்மையும், எத்தனை இன்பமுமானது? திருப்பாடல்கள் 133:1
நம்முடைய இரட்சகரைப் போல நாமும் சமாதானம் பண்ணுகிறவர்களாக இருப்போமாக. சகோதரருடன் ஆவியிலும், சமாதானத்திலும் ஒன்றுபட்டு வாழ்வதே அவருக்கு விருப்பமானது. நம்முடைய ஜீவியத்தில், நாம் சண்டை செய்யும் குணம், நம் பகைவனான சாத்தானோடும் சகல மாமிச பாவங்களோடும் மட்டுமே எதிர்த்து நிற்கக்கூடியதாக இருக்க வேண்டும். நாமும், மற்ற எல்லா சகோதரர்களும் இந்த மாமிச இச்சைகளையே எதிர்த்துப் போராடக் கடமைப்பட்டுள்ளோம். இதுவும் நம்முடைய இரசட்கரின் பாதையிலே, சகல நற்குணங்களுடன் செய்யப்பட்டு, நமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களை நழுவ விடாமல் சகலருக்கும் நன்மை செய்து, விசேஷமாக விசுவாச வீட்டாருடன் சமாதானக் கட்டிலே வளர முயல வேண்டும். (எபே. 5:1-2; 6:10-11) Reprints Reference 3246:5 R3246

