4 செப்டம்பர்க்கான தினசரி வேத தியானம்
அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல. யோவான் எழுதிய முதல் திருமுகம் 4:18
பயத்தின் மூலம் அநேகக் காரியங்கள் சம்பவிக்கக்கூடும். தேவனையும், குமாரனையும் அறிந்து கொண்ட உறுதியான விசுவாசமுள்ளவர்களுக்கு பயமிராது. இவர்களே தேவன் பேரிலே மாயமற்ற அன்பைக் காட்டுவார்கள். உறுதியான விசுவாசத்தின் மூலமாகவே பயத்தை நீக்கி, அதை உண்டாக்குகிற சாத்தானை நாம் மேற்கொள்ள முடியும். இவனை மேற்கொள்ள தேவனுடைய வார்த்தைகளையே ஆயுதமாகக் கொண்டு அவரது கோலின் மேல் நம்பிக்கை வைத்து எந்தத் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமைகளையும், நிர்மூலமாக்கச் செய்யும் தைரியம் அவசியமானது. பெலிஸ்தியன் ஈட்டியோடும், பட்டயத்தோடும் வந்த போது தாவீது தேவனின் நாமத்தினாலே தைரியமாகக் கவண் கல்-னால் அவனை மேற்கொண்டான். (1 சாமு. 17:45-47) Reprints Reference 3231:1 R3231

