17 செப்டம்பர்க்கான தினசரி வேத தியானம்
கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே, அந்த இரகசியம். கொலோசையருக்கு எழுதிய திருமுகம் 1:27
தேவனுடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் உண்மையான கிறிஸ்தவ குணலட்சணங்கள் தங்களில் காணப்படும்படி விளங்க வேண்டும். இவர்கள் பூரணமாக சத்திய வசனத்தினால், தங்களைச் சுத்திகரித்து, பரிசுத்தமுள்ளவர்களாக காத்துக் கொள்ள வேண்டும். வேறு எந்த போதகங்களினாலும் தங்களைக் கறைப்படுத்தாமல், காத்து ஜீவிக்க வேண்டும். உறுதியான விசுவாசமும், நம்பிக்கையும் நம்மை மீட்டு இரட்சித்தவர் பேரில் ஸ்திரமாக வைக்கப்பட வேண்டும். எவ்விதத்திலும் நாம் பெற்ற ஆவியைத் துக்கப்படுத்தாமலும், அணைத்துப் போடாமலும் அதை காத்துக் கொள்ள வேண்டும். (அழைக்கப்பட்டதினாலே உண்டான நம்பிக்கையின் மூலமாக, அந்த மகிமையைப் பெறப் பொறுமையோடே ஓடக்கடவோம்.) (எபி. 6:4-6; கலா. 1:8) Reprints Reference 3250:6 R3250

