17 செப்டம்பர்க்கான தினசரி வேத தியானம்
கர்த்தர் நமக்குக் பெரிய காரியங்களைச் செய்தார் இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருந்தோம் திருப்பாடல்கள் 126:3
கர்த்தர் உங்களுக்கு பெரிய காரியங்களை செய்திருக்கிறாரா? இந்த பெரிய காரியங்கள் அனைத்தையும் அமைதலாக அமர்ந்து சிந்திப்பது நன்மையாக இருக்கும். நீங்கள் அவரை குறித்து அறிந்துகொள்ளவும், அவரில் அன்புகூறவும், இரட்சிப்பைக் குறித்ததான அருமையான திட்டங்கள் இவ்வளவு சின்னப்பருவத்திலே அறிந்துகொள்ளத்தக்கதான வாஞ்சை உங்களில் வரத்தக்கதாக, இவைகளில் ஒன்றை கர்த்தர் உங்களுக்கு செய்திருக்கலாம். நீங்கள் வளரும்போது, இதுவும் உங்களில் வளரும். அதாவது, உங்களால் முடிந்த மட்டும் அவருக்குப் பிரியமானவைகளைச் செய்யவும், இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றத்தக்கதான காரியத்தை முழு இருதயத்தோடு செய்யுமட்டும் வளரும். சங்கீதம் 116:12.

