15 செப்டம்பர்க்கான தினசரி வேத தியானம்
நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்து போய் அசுத்தமானதைத் தொடாதிருங்கள். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொள்வேன். கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 6:17
உண்மையான மனசாட்சியுடன் ஜீவிக்க விரும்பும் யாவரும், ஆவிக்குரிய ஜீவியம் செய்து தங்களை உலகத்தினின்று பிரித்துக் கொள்வார்கள். இவர்கள் தங்கள் இருதயங்களில் விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்களாக, சகோதரர்களை அறிந்து தேவனுடைய குடும்பத்தாராக, இருளைப் பகைத்து ஒளியை நாடுவார்கள். இதுவே ஞானமான வழி. ஒளியைக் கண்டு பயப்படுபவர்கள் தங்கள் கிரியைகளில் பொல்லாதவர்களாகக் காணப்படுகிறவர்களே. இவர்கள் அசுத்தமானதை நடப்பித்துத் தங்களைக் கேடான காரியங்களுக்கு ஒப்புக் கொடுப்பார்கள். இவைகளுக்குத் தங்களை விலக்கி, தேவனுக்குப் பிரியமான வழிகளில் ஜீவிக்க ஒப்புக் கொடுக்கும் யாவரையும் நன்மையான சகோதரர்களாகவும், களைகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட கோதுமை மணிகளாகவும் தேவன் ஏற்றுக் கொள்ள பிரியமாயிருக்கிறார். (ஏசா. 52:11-12) Reprints Reference 2512:4 R2512

