24 செப்டம்பர்க்கான தினசரி வேத தியானம்
மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ணுகிற நான் தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன். கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 9:27
மாமிச சரீரம் பல சோதனைகளுக்குட்படக் கூடும். ஆதலால், புதிய சிருஷ்டிகள் தொடர்ந்து விழிப்புள்ளவர்களாக விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடித் தங்கள் சரீரத்தை மாமிச இச்சைகளுக்கு ஒப்புக் கொடாமல் இதை மேற்கொள்ள வேண்டும புதிய சிந்தையுடன் மாமிசத்தை எதிர்த்துப் போராடி மேற்கொள்பவர்களே பரிசைப் பெற முடியும். அப்போஸ்தலன் சொன்னது போல “நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்.” இது விசுவாசத்தின் போராட்டம். ஏனென்றால் மாமிச இச்சைகளுக்கு எதிர்த்து நின்று, நம் விசுவாசத்தைக் காத்துக் கொள்ளவும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை அடையவும் இது அவசியமானது. (ரோமா. 6:17-22) Reprints Reference 3275:3 R3275

