27 செப்டம்பர்க்கான தினசரி வேத தியானம்
உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக. மத்தேயு நற்செய்தியை 4:7
சோதனை, தேவ பிள்ளைகளைத் தொடர்ந்து தீவிரமாகத் தாக்கி வரும். தேவனுடைய நாமத்திலே இவர்கள் சோதனைகளை மேற்கொண்டு, தாங்கள் பரத்திற்குரியவர்கள் என்று அநேகருக்கு நிரூபிக்க வேண்டும். இப்பாடத்தில் நாம் அறிய வேண்டியது யாதெனில் நாம் தேவனுடைய பட்சமாக இருக்கிறோம் என்று மற்றவர்களுக்குக் காட்டாமல், நம்முடைய நற்கிரியைகளை மற்றவர்கள் காணும்படி செய்து இதன் மூலம் அவர்கள் தேவனை மகிமைப்படுத்தும்படிச் செய்ய வேண்டும். இருளிலிருந்து ஒளியிடம் நம்மை வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கிறவர்களாக இருந்து, சோதனைகளைப் பொறுமையுடன் சகித்து சத்தியத்தின் ஊழியக்காரராக நம்மை ஒப்புக் கொடுத்து ஜீவிக்க வேண்டும். (தேவனைப் பரீட்சைப் பார்ப்பது, தேவ பிள்ளைகளுக்கடுத்தவை அல்ல.) (உபா. 6:14-19) Reprints Reference 3298:5 R3298

