27 செப்டம்பர்க்கான தினசரி வேத தியானம்
என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்கு செய்வாருமில்லை, கேடு செய்வாருமில்லை எசாயா 11:9
பிணியாளிகளை சுகப்படுத்தி பிசாசுகளை துரத்துவதன் மூலம் இயேசுவும், அப்போஸ்தலரும் கண்ணீர் யாவும் துடைக்கப்பட்டு, சுகவீனங்களெல்லாம் சுகமாக்கப்பட போகும் வருங்காலத்தைக் குறித்து விளக்கிக்காட்டினார்கள். தேவன் ஒரு இராஜ்யத்தைக் குறிப்பதற்கு சில நேரங்களில் மலை (அல்லது) பர்வதம் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தினார். இந்த வேதவாக்கியத்தில் வரும் பரிசுத்த பர்வதம் கிறிஸ்துவின் இராஜ்யத்தை அடையாளப்படுத்துகிறது. வெளிப்படுத்தல் 21:4.

