23 செப்டம்பர்க்கான தினசரி வேத தியானம்
பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக் கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராட வேண்டும். யூதா எழுதிய திருமுகம் 1:3
நம்முடைய விசுவாசத்தின் நல்ல போராட்டம், திருவசனத்திற்காகவே இருக்க வேண்டும். இந்தப் போராட்டம் மூலம் தேவனுடைய குணலட்சணங்களை நாம் காத்துக் கொள்ளவும் வேண்டும். இதன் பொருள் என்னவெனில் நம் சத்தியத்திற்கு முற்றிலும் நம்மை ஒப்புக் கொடுத்து, மனித கட்டளைகளுக்கும் அவர்களுடைய விசுவாசத்திற்கும், கொள்கைகளுக்கும் எதிர்த்து நிற்க வேண்டும். அப்போஸ்தலன் சொன்னபடி “சுவிசேஷத்திற்காக நான் உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டேன்” என்று சொல்லவும் வேண்டும். சத்தியமானது தேவனுடைய பிரதிநிதியாகவும் கிறிஸ்துவின் பிரதிநிதியாகவும் இருப்பதால், இதுவே நம் கொடி. இந்த சத்தியத்திற்காக உண்மைப் போர் வீரர்களாக மரண பரியந்தம் போர் புரியக் கடமைப்பட்டுள்ளோம். (பி லி . 1:27-30) Reprints Reference 3274:3 R3274

