12 செப்டம்பர்க்கான தினசரி வேத தியானம்
உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக் கொள்ளுங்கள். லூக்கா நற்செய்தியை 21:19
“நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும், நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது” என்று அப்போஸ்தலன் விவரித்துள்ளதைக் காண்கிறோம். பொறுமை, கிருபையின் குணலட்சணங்களில் ஒன்று. தேவ பிள்ளைகளிடையே பொறுமை விசுவாசத்திற்கு முன்னதாக இடம் பெற வேண்டும். பொறுமை ஒருவரின் விசுவாச வளர்ச்சியைக் காட்டக்கூடியதாக இருக்கும். பொறுமையை இழக்கும் எந்தக் கிறிஸ்தவனும், விசுவாசத்தில் பூரணப்பட்டவன் அல்ல. பொறுமையுள்ளவன் கிறிஸ்துவின் பேரில் சார்ந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்று கொள்ளும் வரை விசுவாசத்துடன் காத்திருப்பான். சிலகாலம் காத்திருந்து பொறுமையுடன் சகலத்தையும் அவர் கைக்கு ஒப்புக் கொடுத்து, அவர் நடத்துதலை எதிர்பார்த்திருப்பான். (யாக். 1:3-7) Reprints Reference 3245:3 R3245

