12 செப்டம்பர்க்கான தினசரி வேத தியானம்
உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள் வருமளவும் பரலோகம் ஏற்றுக்கொள்ளவேண்டும் திருத்தூதர் பணிகள் 3:21
தேவன் தமது ஆவியை அனுப்பி, பூமியின் தோற்றத்தைப் புதிதாக்குவார் என தாவீது எழுதியிருக்கிறார். கர்த்தருடைய ஈடுபலியினால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி வருவார்கள் என்று ஏசாயா எழுதியிருக்கிறார். தேவன் தம்முடைய ஜனங்களை மீண்டுமாக அவர்களுடைய தேசத்திற்கு கொண்டுவந்து, அவர்களை சுகமாய் தங்கியிருக்கப் பண்ணுவார் என எரேமியா எழுதியிருக்கிறார். மரித்தோர் மீண்டும் ஜீவனுக்குக் கொண்டுவரப்படுவார்கள் என்ற இந்த ஒரேசெய்தியையே, வேதாகமத்தில் அநேகமுறை எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அப்போஸ்தலர் 1:11.

