20 செப்டம்பர்க்கான தினசரி வேத தியானம்
உன்னத்தத்திலும், பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம் பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம் பண்ணுகிறேன். எசாயா 57:15
நொறுங்குண்டதும், நருங்குண்டதுமான இருதயம் உள்ளவர்களைத் தேவன் புறக்கணியார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதனால் புதிய சிருஷ்டிகள் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கும் போது இவர்களுக்கு உண்டாகும் பல கஷ்ட, நஷ்டங்களிலும், உபத்திரவங்களிலும் பணிவுடன் தங்கள் காரியங்களைத் தேவனுக்கு முன் சமர்ப்பிக்கும் பொழுது, கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட இவர்களுக்கு ஆறுதல் அளிப்பார். மரணத்திற்கேதுவான பாவத்தைச் செய்தவர்களுக்கோ, அப்போஸ்தலன் கூறுவது போல மனந்திரும்புவதற்கேதுவாய், அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம். தேவ ஆவி இவர்களில் வாசமாயிராது. (சங். 34:15-22) Reprints Reference 3255:4 R3255

