25 செப்டம்பர்க்கான தினசரி வேத தியானம்
அவரே தேவனால் நமக்கு ஞானமும், நீதியும், பரிசுத்தமும், மீட்புமானார். கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 1:30
நம்மை மீட்டு இரட்சித்து, தம்முடைய பலியினாலே நம்மைக் கிரயத்திற்குக் கொண்டவர், நம்முடைய வழிகாட்டியாக இருந்து, தம்முடைய சுவிசேஷத்தின் மூலமாக ஞானத்தைத் தந்தருளுகிறார். விழுந்து போன நிலையை நாம் உணர்ந்து, நமக்கு ஒத்தாசையாக வந்தவரை நாம் நினைவு கூறக் கடமைப்பட்டுள்ளோம். நமக்கு ஆசாரியராக இருந்து, முதலாவது நம்மை நீதிமான்களாக்கி, பின்னர் பரிசுத்தப்படுத்தி அல்லது பிரதிஷ்டைப்படுத்தித் தமக்குக் கீழ் ஆசாரியர்களாக நியமித்து முடிவிலே இராஜாக்களாகவும் மாற்றுகிறார். இவ்விதம் விசுவாசமுள்ளவர்களைப் பூரணமாகப் பாவ நிலையிலிருந்தும், மரணத்தினின்றும் மீட்டு மகிமைக்கும், கனத்திற்கும், சாகாமைக்கும் உயர்த்துவார். தேவன், கிறிஸ்து மூலமாகவே எழுப்பச் சித்தமுள்ளவராயிருக்கிறபடியால், இவரே நம் மீட்புமானார். (பி லி . 3:7-11; 1 கொரி. 1:24-25) Reprints Reference 3281:6 R3281

