25 செப்டம்பர்க்கான தினசரி வேத தியானம்
பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள். பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின எசேக்கியேல் 18:2
ஆதாம் தேவனுக்கு கீழ்ப்படியாமல் போனபோது, அவர் பாவம் என்ற புளிப்பான திராட்சக்காயைப் புசித்து மரணத்தீர்ப்புக்குள்ளானார். அதாவது, அவருடைய பற்கள் கூசிப்போயிற்று. பரம்பரையாக, அவருடைய சந்ததியினர், எவ்வளவு நல்லவர்களும் நல்லெண்ணங்கள் கொண்டவர்களாக இருந்தாலும் அனைவருமே மரணத்திற்கு உள்ளாயினர். ஆயிரவருட யுகத்தில், ஆதாமினிமித்தம் வந்த மரணத்தீர்ப்பு வல்லமையற்று இருப்பதினால் ஒவ்வொரு தனிப்பட்ட நபரும், அவனவன் தன்னுடைய சொந்த நடக்கையினால் நியாயந்தீர்க்கப்படுவான். புலம்பல் 5:7.

