29 செப்டம்பர்க்கான தினசரி வேத தியானம்
மனமேட்டிமை உள்ளவனெவனும் யேகோவாவிற்கு அருவருப்பானவன். நீதிமொழிகள் 16:5
இவ்வுலகில் புதிய சிருஷ்டிகள் மேற்கொள்ள வேண்டிய பல தீமைகளில் ஒன்று, மனமேட்டிமை. உலகப்பிரகாரமான மனமேட்டிமை, தேவன் பேரிலே நாம் கொண்டுள்ள விசுவாசத்தையும், கீழ்ப்படிதலையும் எதிர்த்து போரிடக் கூடியதாக இருக்கும். தேவன் பேரில் முழு நம்பிக்கையுள்ளவர்களும், தைரியம் உள்ளவர்களும் மட்டுமே இந்த அரக்கனை மேற்கொள்ள முடியும். இது ஒருவரின் தனிப்பட்ட போர், மனமேட்டிமை எல்லாத் தீங்குக்கும் வழி நடத்துமாதலால், இதனை முற்றிலும் ஒழிப்பதே தேவபிள்ளைகளின் நோக்கமாயிருக்க வேண்டும். மனத்தாழ்மை நம்மைச் சகல நல்லொழுக்கங்களுக்குள் வழிநடத்தி அன்பின் பிரமாணத்தைப் பூரணமாகக் கைக் கொள்ளச் செய்யும். கவிஞன் எழுதியது போல, “பெருமை முடியும் இடத்தில் பெருந்தன்மை துவங்கும்.” (லூக். 14:8-11; 18:10-14) Reprints Reference 3231:1 R3231

