15 செப்டம்பர்க்கான தினசரி வேத தியானம்
இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் எபிஎபிரேயருக்கு எழுதிய திருமுகம் 13:8
நம்முடைய கர்த்தர் இயேசு, கடந்த காலத்தில் நமக்காக செய்தது என்ன, அவர் பூமிக்கு வந்து, பாவம் மற்றும் மரணத்திலிருந்த நம்மை மீட்க பாடுபட்டு மரித்தார். அவர் எல்லாருக்குமான ஒரு மீட்கும் பொருளாக தம்முடைய ஜீவனையே கொடுத்தார். தற்போது இயேசு எப்படிப்பட்டவராக இருக்கின்றார், இக்கேள்விக்கு, நாம் அவரில் அன்புகூர்ந்து, அவர் சித்தம் செய்ய முயற்சிப்போமாகில் அவர் நமக்கு (தற்போது) நண்பரும் வழிகாட்டியுமாக இருக்கிறார் என்பதே பதிலாகும். நித்தியத்திற்கும் இயேசு எப்படிப்பட்டவராக இருப்பார், இக்கேள்விக்கு, பாவம், துக்கம் மற்றும் மரணம் ஆகிய அனைத்தையும் முடிவுக்கு கொண்டுவந்து, பூமியின் மனுக்குலம் அனைவரையும் ஆசீர்வதிக்கக்கூடிய நீதியுள்ள ஆட்சியாளராக (நித்தியத்திற்கும்) இருப்பார் என்பதே பதிலாகும். வெளிப்படுத்தல் 1:4.

