13 செப்டம்பர்க்கான தினசரி வேத தியானம்
அல்லேலூயா திருப்பாடல்கள் 146:1
ஆயிரவருட அரசாட்சியின்போது, "நீங்கள் கர்த்தரை அறிந்திருக்கிறீர்களா?" என்று ஒருவரும் மற்றொருவரை கேட்க மாட்டார்கள். அச்சமயத்தில், சிறியோர் முதல் பெரியோர் வரை யாவரும் அவரை அறிந்திருப்பார்கள். இது சம்பவிக்கும்போது, எல்லா ஜனத்திற்கும் ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும்படி பிதாவாகிய தேவனும், அவருடைய குமாரனும் ஏற்பாடு செய்த அன்பின் திட்டத்தைப் புரிந்துகொண்டு, ஒவ்வொருவரும் தேவனுடைய நன்மையை நினைத்து, அவரைத் துதிப்பார்கள். வெளிப்படுத்தல் 19:5.

