18 செப்டம்பர்க்கான தினசரி வேத தியானம்
இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம் உரோமையருக்கு எழுதிய திருமுகம் 5:1
நீதிமானாக்கப்படுதல் என்பது, "நீதி உள்ளவனாக ஆக்கப்படுதல்" (அல்லது) "நீதியுள்ளவனாக எண்ணப்படுதல்" என்று பொருள்படும். இயேசுவின் உண்மையான நீதி மற்றும் அவர்மேல் நாம் வைத்துள்ள விசுவாசத்தினிமித்தமே தேவன் நம்மை நீதி உள்ளவர்கள் என்று எண்ணுகிறார். இதை நம்முடைய சுய முயற்சியினால் அடைய முடியாது. மாறாக இயேசுவை நம்முடைய இரட்சகராக நாம் பெற்றுக்கொண்டதால் மாத்திரமே நாம் தேவன் பார்வையில் நீதிமான்கள் என்று எண்ணப்படுகிறோம். ரோமர் 1:17.

