6 ஆகஸ்ட்க்கான தினசரி வேத தியானம்
தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான். யாக்கோபுஎழுதிய திருமுகம் 4:7
சோதனைக்கு நாம் நம்மை விலக்கி அதற்கு எதிர்த்து நிற்போமாகில் நாம் நற்குணத்தில் அதிகமாகப் பலப்பட முடியும். இது அந்த நேரத்தில் மாத்திரமல்ல, தொடர்ந்து நமக்கு ஏற்படும் சோதனைகளிலும் நம்மை பலப்படுத்தும். இதனால் நம் எதிராளியான சாத்தானை நாம் மேற்கொள்ளவும் முடியும். நாம் அவனுடைய சோதனைகளுக்கு இடம் கொடுப்போமாகில் அவன் நம்மை ஜெயித்தவனாக இருப்பான். அப்போஸ்தலர் கூறுவது போல, “அவனுடைய தந்திரங்கள் நமக்கு தெரியாததல்லவே.” அவன் வஞ்சகமுள்ள எதிராளி. தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவருடைய வார்த்தைகளுக்குச் செவி கொடுத்து, அதற்கே அடிமைகளாக இருக்க முற்றிலும் பிரயாசப்பட வேண்டும். (1 பேது. 5:7-10) Reprints Reference 2567:3 R2567

