6 ஆகஸ்ட்க்கான தினசரி வேத தியானம்
துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினாலே நிறைந்து எபேசியருக்கு எழுதிய திருமுகம் 5:18
சிலர் தங்களுடைய பிரச்சனைகளை தற்காலிகமாக மறப்பதற்கென்று மதுபானம் பருகுவதுண்டு. இடர்பாடுகளை நீக்க வழிகண்டு பிடிப்பதற்குப் பதிலாக மதுபானம் அருந்துவது, அநேகரை மேலும் பாதகமான சூழ்நிலைக்கு தள்ளி, வேறே பிரச்சனைகள் உண்டாகக் காரணமாகிறது. கிறிஸ்தவர்களாகிய நாமோ, தீங்கு விளைவிக்கக்கூடிய அதிகப்படியான மதுபானம் அருந்துதலை தவிர்த்து, நம்முடைய குணநலன்களின் வளர்ச்சிக்காக நம்முடைய சிந்தை மற்றும் சரீரத்தின் ஒவ்வொரு திறன் மற்றும் தாலந்தை தேவனுடைய சித்தத்திற்கென்று முழுமையான அர்பணிப்புக்குள் கொண்டுவருவோமாக. நீதிமொழிகள் 20:1.

