3 செப்டம்பர்க்கான தினசரி வேத தியானம்
பலியை அல்ல, இரக்கத்தையும், தகன பலிகளைப் பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும் விரும்புகிறேன். ஓசேயா 6:6
தன் இருதயத்தையும், சுய சித்தத்தையும் தேவனுக்கு ஒப்புக் கொடுத்தவனே சகலத்தையும் அவருக்கு ஒப்புக் கொடுத்தவனாவான். ஒருவன் தன் சுய சித்தத்தை விடாமலும், கீழ்ப்படிதலான இருதயம் இல்லாதவனுமாய் இருந்தால், அவன் தேவனுக்கேற்ற பலியைச் செலுத்த முடியாது. “ பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலே நல்லது” என்ற மொழி கிறிஸ்துவுக்குள் பரிசுத்தம் செய்யப்பட்டவர்கள் இருதயத்தில் எழுதப்பட வேண்டும். கீழ்ப்படிதலின் ஆவி ஒருவர் தேவசித்தத்தை நடப்பிக்க நாளுக்கு நாள் உற்சாகப்படுத்தி கீழ்ப்படியச் செய்யும். சங்கீதக்காரன் சொன்னபடி, “உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன். உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது” என்று சொல்லச் செய்யும். (சங். 40:6-8) Reprints Reference 3225:5 R3225

