3 செப்டம்பர்க்கான தினசரி வேத தியானம்
இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே, யோபின் பொறுமையைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே யாக்கோபுஎழுதிய திருமுகம் 5:11
தேவனுடைய தீர்க்கதரிசிகள், பொறுமையோடே துன்பத்தை சகித்ததற்கு திருஷ்டாந்தமாக இருக்கின்றனர். யோபுவுக்கு மிகுந்த உபத்திரவமும், துக்கமும் உண்டானபோதும், அவர் தொடர்ந்து தேவனிடத்தில் நம்பிக்கை வைத்திருந்தார். தேவன் யோபுவின் ஜீவனைத்தவிர மற்றெல்லாவற்றையும் எடுத்துக்கொள்வதன் மூலம் அவருடைய உண்மையை சோதிக்கும்படி, சாத்தானை அனுமதித்தார். இறுதியாக அவருடைய உடல்நலம் மீண்டும் முன் இருந்த நிலைக்கு கொண்டுவரப்பட்டு, அவர் இழந்த யாவற்றையும் காட்டிலும் இன்னும் அதிகப்படியாக திரும்பப் பெற்றுக்கொண்டார். ரோமர் 5:3.

