22 செப்டம்பர்க்கான தினசரி வேத தியானம்
என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும், கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன். திருப்பாடல்கள் 23:6
நன்மையும், கிருபையும் இனி வரும் காரியமாக இருந்தாலும், தேவனுடைய பிள்ளைகளுக்கு இது இப்பொழுதே அருளப்பட்டதை எண்ணி நாம் புகழ வேண்டும். கிறிஸ்துவின் மூலம் அருளப்படும் சந்தோஷத்தை இக்காலத்திலே அறிந்து கொள்ளாதவர்கள், இனிவரும் இராஜ்யத்தின் சந்தோஷமான ஆசீர்வாதங்களையும் அறியாதவர்களாகவே இருப்பார்கள். தங்களை பிரதிஷ்டை செய்து தேவன் பேரிலும், குமாரன் பேரிலும் தங்களை பூரண விசுவாசமுள்ளவர்களாக இக்காலத்தில் காணப்படக் கூடியவர்களுக்கு தேவனுடைய ராஜ்யத்தில் நீடித்த நாட்களாக (அதாவது சதாகாலத்திற்கு) நன்மையும், கிருபையும், சந்தோஷமும் உண்டாயிருக்கும். இவையாவும், இனி வரும் ஆசீர்வாதங்கள் என்று தேவபிள்ளைகள் எண்ணாமல், நாளுக்கு நாள் நன்மையும், கிருபையும் நம்மை உற்சாகப்படுத்தி, பலப்படுத்தி வருகிறதை உணர வேண்டும். (சங். 16:5-11) Reprints Reference 3270:5 R3270

